2 வயது குழந்தையின் உயிரைப் பறித்த அலட்சியம்;பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய ஒப்பந்ததாரர் மீது எப்.ஐ.ஆர்!

2 வயது குழந்தையின் உயிரைப் பறித்த அலட்சியம்;பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய ஒப்பந்ததாரர் மீது எப்.ஐ.ஆர்!
Published on

பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால், பைடரஹள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லரஹட்டியில் தோண்டப்பட்ட சாலையை சரி செய்யத் தவறியதால், இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.

காலை 10.30 மணியளவில் கார்த்திக் என அடையாளம் காணப்பட்ட குழந்தை BWSSB ( Bengaluru Water Supply and Sewerage Board) பைப்லைன் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது.

உத்தரபிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்தவரும், உயிரிழந்த குழந்தையின் தந்தையும், பெயிண்டருமான ஹனுமான் கூறுகையில், காலை 9.30 மணியளவில் மாகடி சாலையில் உள்ள தொட்டகொல்லரஹட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே தனது குழந்தை விளையாடுவதை பார்த்தார். அவர் வேலைக்குச் சென்ற ஒரு மணி நேரத்திற்குள், காலை 10.30 மணியளவில், தோண்டப்பட்ட குழியில் தங்கள் குழந்தை கார்த்திக் விழுந்துவிட்டதாக அவரது மனைவியிடமிருந்து அழைப்பு வந்தது, மேலும் வீட்டிற்கு விரைந்து வந்து உதவுமாறு மனைவி கூறினார். தகவல் அறிந்ததும் பதறிக் கொண்டு அந்த இடத்தை அடைந்த அவர், சுற்றியிருந்த உள்ளூர்வாசிகளின் உதவியைப் பெற்று, குழிக்குள் அசையாமல் இருந்த தனது குழந்தையை வெளியே எடுத்தார்.

BWSSB அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் தான் தனது குழந்தை உயிரிழந்தது, எனவே அவர் தான் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, ஹனுமான் BWSSB பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது புகார் மற்றும் FIR பதிவு செய்தார்.

BWSSB சேர்மன் ஜெயராமைத் தொடர்பு கொண்டபோது, இந்த சம்பவம் குறித்து தனக்குத் தெரியும் என்றும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது அலட்சியத்திற்காக கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளருக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

"இந்த பணியானது மாகடி சாலையில் உள்ள திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்க குழாய் இணைப்புடன் தொடர்புடையது. ஒப்பந்ததாரருக்கு எதிரான கிரிமினல் வழக்கில் மட்டும் அல்ல, BWSSB சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தரும் விஷயங்களிலும் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் என" ஜெயராம் கூறினார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com