நேபாள விமான விபத்து! பயணியின் 'பகீர்' வீடியோ வைரல்!

நேபாள விமான விபத்து! பயணியின் 'பகீர்' வீடியோ வைரல்!

நேபாளத்தின் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் உள்பட 72 பேருடன் வந்த எட்டி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. இந்த நேபாள விமான விபத்தின் போது, ​​விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. தற்போது அந்த ' பகீர்' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, உத்திரபிரதேசத்தில் உள்ள காஜிபூரைச் சேர்ந்த நான்கு பயணிகள், தங்கள் விமான அனுபவத்தை பதிவு செய்ய பேஸ்புக்கில் நேரலைக்கு வந்திருந்தனர். சில நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோ தற்போது காண்போரை குலை நடுங்கச் செய்துள்ளது.

இந்த விபத்து குறித்து நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அந்த விமான விபத்தில் விமானத்தில் பயணித்த 72 பேரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 68 பேர் உயிரிழந்தனர். தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக எழுந்த தொழில்நுட்ப கோளாறுகளால் பயணிகள் விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்றும், அங்கு நிலவிய காலநிலையும் விமான விபத்துக்கு ஒரு பெரிய காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த விபத்தில் பலியானவர்களில் 5 இந்தியர்கள் உட்பட 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில்​​ விபத்தில் பலியான பயணி ஒருவர் பேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக நேபாள இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com