ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு கீழ் வருமானதாராருக்கு புதிய வரி விதிப்புகள் இருக்காது நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Updated on

ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக உள்ள ஊதியதாரர்களுக்கு இனி புதிய வரி விதிப்புகள் இருக்காது என்ற அறிவிப்பினை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்-ன் பஞ்ச்ஜன்யா பத்திரிகை நடத்திய விழாவின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்ஜட் குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார். "நானும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள் தான். என்னால் நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்க கூடிய நிறைய பிரச்சினைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஊதிய பெறுபவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு ஏதும் இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிட்டதாவது ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ ரயில் விரிவாக்கம் போன்ற திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் அதிக கவனம் செலுத்த இருக்கிறோம் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மொத்தம் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை வழங்கியுள்ளோம். மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி வருகிறோம். நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு மேலும் பலவற்றைச் செய்ய முடியும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

நடுத்தர வர்க்கத்தினருக்காக அரசு நிறைய திட்டங்களை தற்போது அமல்படுத்தியிருக்கிறது. இனி வரும் காலத்திலும் அவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்போம். இதற்காக 2020ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அரசு மூலதன செலவுகளை உயர்த்தி வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றிலிருந்து பொருளாதாரம் மீண்டும் வரும் நிலையில், 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகி உள்ளது. 2023 -24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து மாநில நிதியமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்துகிறார்.ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்து துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவதும் வழக்கம். 

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com