NRI யா நீங்கள்? ஆதார் கார்டு பெறவேண்டுமா? இதை படிங்க ...!

Aadhar card
Aadhar card

ஆதார் அட்டை இந்திய மக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாக மாறிவிட்டது எனலாம். மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் கூடுதலாக நிதி சேவைகளைப் பெறவும் ஆதார் அட்டை மிகவும் முக்கியமானதாக உள்ளது. மேலும் வங்கிகளில் மற்றும் KYC தேவைப்படும் அனைத்து இடத்திலம் பொது மற்றும் தனியார் அதிகாரிகள் ஆதார் அட்டையை முக்கிய ஆவணமாகக் இருந்து வருகிறது.

ஒரு NRI அதாவது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு இந்தியர் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா..? நிச்சயம் முடியும். இதேபோல் NRI-களுக்கும் ஆதார் அட்டை மிகவும் முக்கியம் தான்.

NRI-களுக்கு ஏன் முக்கியம் என்றால் இந்தியாவுக்கு வந்து நீங்கள் பணியாற்ற விரும்பினால் குறிப்பாக அரசுத் துறையில் வேலை பெறுவதற்கும் NRIகளுக்கான ஆதார் அட்டை முக்கியமானது. நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்ய விரும்பினால், ஆதார் அட்டை அவசியம்.

NRIகளுக்கான ஆதார் அட்டை எப்படி விண்ணப்பம் செய்ய வேண்டும்..?

இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ எந்த ஆதார் மையத்திலிருந்தும் விண்ணப்பிக்கலாம் என்பதை UIDAI உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் பல வருடமாக வெளிநாட்டில் NRI தகுதி உடைய அனைவரும் ஆதார் கார்டு பெறலாம்.

ஆதார் அட்டையைப் பெறுவதற்கு ஒரு NRI பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை என்ன என்பதை UIDAI அமைப்புப் தெரிவித்துள்ளது. இதைப் பின்பற்றினாலே ஆதார் அட்டையை மிகவும் எளிதாகப் பெற்று விட முடியும்.

  • உங்கள் இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் கொண்டு அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்லவும்.

  • ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவு படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பவும்

  • NRI-கள் தங்கள் மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்

  • NRI சேர்க்கைக்கான DECLARATION இந்திய குடிமகன்கள் DECLARATION-க்கு சற்று வித்தியாசமானது. இதனால் இப்படிவத்தில் இருக்கும் பின்வருவனவற்றைப் படித்து, உங்கள் பதிவுப் படிவத்தில் கையொப்பமிடுங்கள்.

  • உங்களை NRI ஆகப் பதிவு செய்ய ஆதார் மையத்தின் ஆபரேட்டரிடம் கேளுங்கள்

  • அடையாளச் சான்றுக்கு, ஆபரேட்டரிடம் உங்கள் பாஸ்போர்ட்டைக் கொடுங்கள் அடையாளச் சான்றுக்குப் பிறகு, பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்கவும்.

  • ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கும் முன் கம்பியூட்டர் திரையில் பதிவிட்டு உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.

  • உங்கள் 14 இலக்க பதிவு ஐடி மற்றும் தேதி மற்றும் நேர முத்திரையைக் கொண்ட ரசீது அல்லது பதிவுச் சீட்டுப் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

  • உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டு உள்ள முகவரி மாறியிருந்தால், UIDAI-ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலுக்கு இணங்க தற்போதைய முகவரிச் சான்று உடன் புதுப்பிக்கப்பட்ட இந்திய முகவரியை நீங்கள் வழங்க வேண்டும்.

  • இல் இந்தச் செயல்முறையை முடித்த பிறகு உங்கள் ஆதார் ஜெனரேஷன் ஸ்டேட்டஸ் கீழ்கண்ட இணைய முகவரியில் myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus சரிபார்க்கலாம். UIDAI அமைப்பின் படி, உங்கள் முகவரி மற்றும் பிறந்த தேதியை சரிபார்ப்பதற்காக உங்கள் பாஸ்போர்ட்டுடன் கூடுதலாக மற்றொரு முறையான ஆவணம் அல்லது ஆவணங்களை வழங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com