ஒடிஷா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மரணம்!

ஒடிஷா எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மரணம்!

ஒடிசா மாநிலத்தின் எதிர்க்கட்சி துணை தலைவரும், ஒடிசா மாநில பாஜகவின் துணை தலைவருமான பிஷ்ணு சரண் சேத்தி (வயது 61) காலமானார். அவரது மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தின் திரிஹரி தொகுதிக்கு உட்பட்ட மங்கராஜ்பூர் கிராமத்தில் வசிப்பவர் பிஷ்ணு சரண் சேத்தி. கடந்த 2000-ம் ஆண்டு பாஜக சார்பில் ஒடிசா சட்டசபை உறுப்பினராக முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், பின்னர் 2019-ம் ஆண்டு பத்ரக் மாவட்டத்தின் தாம்நகர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி துணை

தலைவராக செயல்பட்டதுடன், பாஜகவின் ஒடிசா துணை தலைவர் பதவியையும் வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த இவர், புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பு மற்றும் மூளையில் ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகளால் 2 மாதங்களாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ.) வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com