இந்தியாவில் எப்போது ஒலிம்பிக்? -  அனுராக் தாக்கூர்

இந்தியாவில் எப்போது ஒலிம்பிக்? - அனுராக் தாக்கூர்

"ஒலிம்பிக் போட்டி  இந்தியாவில் 2036-ல் நடக்கும்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்"

சர்வதேச அளவிலான ஒலிம்ப்க் போட்டியானது இந்தியாவில் 2036-ம் ஆண்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர்  தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

2036-ம் ஆண்டுக்கான  ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கு ஏலம் எடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெற்றால், ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்குப் பிறகு விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நான்காவது ஆசிய நாடு என்ற பெருமை நம் நாட்டுக்குக் கிடைக்கும், அடுத்து வரக்கூடிய மூன்று கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஹோஸ்டிங் உரிமையை பாரிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஆகிய நகரங்களுக்கு எற்கனவே சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வழங்கியுள்ளது. எனவே 2036-க்கான உரிமையை இந்தியா பெற முயற்சிக்கிறோம். இந்தியாவில், ஒலிம்பிக்  விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான திட்ட வரைபடம், அடுத்த வருடம் செப்டம்பரில் மும்பையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்திய அரசு வழங்கும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com