ஆன்லைனில்  பிஎச்டி படிப்பு செல்லாது; யுஜிசி எச்சரிக்கை!

ஆன்லைனில்  பிஎச்டி படிப்பு செல்லாது; யுஜிசி எச்சரிக்கை!

ஆன்லைனில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் பிஎச்டி படிப்பு மற்றும் பட்டம் செல்லாது.. எனவே போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என  யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உயர் கல்வி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் யுஜிசி அமைப்பு தெரிவித்ததாவது;

நாட்டில் சில கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள், சர்வதேசக் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் வாயிலாக பிஎச்டி படிப்புகளை வழங்கி வருகின்றன. ஆனால் இத்தகைய படிப்புகள் செல்லுபடியாகாது. இதுகுறித்துப் பொதுமக்களும் மாணவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். யுஜிசி விதிமுறைகளைப் பின்பற்றியே, இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் பிஎச்டி படிப்புகளையும் பட்டத்தையும் வழங்க வேண்டும்..

இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.

முன்னதாக பிஎச்.டி. படிப்புக்கான புதிய தகுதிகள் குறித்த வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டது. அதில் முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் 4 ஆண்டுகால இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்யவும், பிஎச்.டி. படிப்பில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கவும் யுஜிசி முடிவெடுத்து, அறிவிப்பு வெளியிட்டது. அதேபோல வேறு சில அம்சங்களையும் அறிமுகம் செய்தது.

அனைத்து பல்கலைக் கழகங்களும் தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது பல்கலைக் கழகங்களே நடத்தும் நுழைவுத் தேர்வின் மூலம் பிஎச்.டி. மாண்வர்களை அனுமதிக்க வேண்டும்.

இதில் 60 சதவீத காலி இடங்கள் நெட் / ஜேஆர்எஃப் நுழைவுத் தேர்வு மூலமும் 40 சதவீத காலி இடங்கள் பல்கலைக்கழகத் தேர்வுகள் மூலமும் நிரப்பப்படும்.

-இவ்வாறு யுஜிசி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com