சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்ல  இனி 9 மணி நேரம்தான்!!

சென்னையிலிருந்து மும்பைக்குச் செல்ல இனி 9 மணி நேரம்தான்!!

சென்ற மாதம் நாக்பூர் - மும்பை, புனே - நாக்பூர் எக்ஸ்பிரஸ் சாலை திறந்துவிடப்பட்டது முதல் புனே - பெங்களூர், பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை பற்றிய அறிவிப்புகள் வருமென்று எதிர்பார்க்கப்பட்டது.

ஐந்தாண்டு கால காத்திருப்புக்குப் பின்னர், ஒரு வழியாக நல்ல செய்தி வந்திருக்கிறது. பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ் சாலை இன்னும் ஓராண்டுக்குள் தயாராகிவிடும்.

விரைவுச் சாலை பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார். இன்று பெங்களூர் வந்தவர், விமானம் மூலமாக திட்டப்பணிகளை பார்வையிட்டிருக்கிறார்.

சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலையின் 10 கட்ட பணிகளில் 6 கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ரூ.12,500 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி எக்ஸ்பிரஸ் சாலையாக இது அமையும். தமிழகத்தில் 106 கி.மீ வரை தூரம் செல்லும் இந்த பாதையில் நிலங்களை கையகப்படுத்த அதிக காலம் தேவைப்பட்டது.

இதுவரை சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்கு ஐந்து மணி நேரமானது. இனி அதில் பாதியாக குறையும் என்று எதிர்பார்க்கலாம். 120 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியும். அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள், அவசர சிகிச்சைக்கான மையங்களும் அமைக்கப்படும். பசுமை வழித்தடமாகவும் அமையவிருக்கிறது.

262 கி.மீ நீளம் கொண்ட எக்ஸ்பிரஸ் சாலை கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்டதாக இருக்கும். தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் சர்வீஸ் சாலை இல்லையென்பதால் நடு வழியில் இறங்க முடியாது. 2 இடங்களில் மட்டுமே குடியிருப்புகள் வழியாகவே சாலை அமைக்கப்பட்டுள்ளது. மற்றவை திறந்த வழிதான். சாலையின் இரு புறமும் வேலி அமைக்கப்படுவதால் பாதசாரிகளோ, விலங்குகளோ வர வாய்ப்பில்லை.

புனே - பெங்களூரு இடையே பசுமை வழிச்சாலையும் தயாராகிவிட்டால் மும்பை எக்ஸ்பிரஸ் சாலையுடன் இணைக்கப்பட்டுவிடும். சென்னையிலிருந்து மும்பை செல்லவேண்டுமென்றால் பெங்களூர் எக்ஸ்பிரஸ் வழியாக சென்றால் 9 மணி நேரத்தில் மும்பைக்கு போய்விடலாம் என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com