‘ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டதல்ல நாடாளுமன்றம்’ பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்!

‘ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டதல்ல நாடாளுமன்றம்’ பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கண்டனம்!

லைநகர் டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டு இருக்கும் நாடாளுமன்றக் கட்டடம் இம்மாதம் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. 64 ஆயிரத்து 500 சதுர அடியில் முக்கோண வடிவில் நான்கு மாடிகளுடன் இந்திய நாடாளுமன்றத்துக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு இருக்கிறது. இந்தக் கட்டடத்தை மரபுப்படி குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கூறியதோடு, இந்த நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவையும் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்து உள்ளன.

இதைத் தொடர்ந்து, ‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் மோடிதான் திறந்து வைப்பார்’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்து இருக்கிறார். அதையடுத்து, நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை என்னும் முடிவை மறுபரிசீலனை செய்து, திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாடாளுமன்ற புதியக் கட்டடத்தைத் திறக்க குடியரசுத் தலைவரை அழைக்காதது, இந்திய அரசியலமைப்பின் உட்சபட்ச பதவியை அவமதிக்கும் செயல் ஆகும். ஈகோ என்ற கற்களால் கட்டப்பட்டது அல்ல நாடாளுமன்றம். அது இந்திய அரசியலமைப்பின் மாண்பினால் கட்டப்பட்டது’ என்று பதிவிட்டு இருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com