நடிகர்களைப் பாடாய்படுத்தும் கட்சி அரசியல் - கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கோஷ்டி மோதல்!

நடிகர்களைப் பாடாய்படுத்தும் கட்சி அரசியல் - கோலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் கோஷ்டி மோதல்!

சினிமாவும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கிடப்பது தமிழகத்தில் மட்டும்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். நடிகர்கள் ஏதாவதொரு கட்சியில் நடிகர்கள் சேரும்போது, அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களும் அதே கட்சியில் இணைந்துவிடுகிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்திலிருந்து ரஜினி கமல் காலம் வரை பார்த்து வருகிறோம்.

தமிழ் சினிமா நடிகர்களின் அரசியல் ஆர்வத்தை பாலிவுட் உலகம் கிண்டலடிப்பதுண்டு. ஆனால், காலம் மாறிவிட்டது. சமீபத்தில் மிண்ட் பத்திரிக்கை எடுத்து ஆய்வில் பாலிவுட் நடிகர்களுக்கான ஆதரவுத்தளம் தொடர்ந்து அரசியல்மயமாகி வருவது தெரிகிறது. பா.ஜ.க ஆதரவு நடிகர்கள், காங்கிரஸ் ஆதரவு நடிகர்கள் என இருபெரும் பிரிவாக பிரிந்து நிற்பது தெரிய வந்திருக்கிறது.

பாலிவுட் சினிமாவின் கான் நடிகர்களில் முக்கியமானவரான ஷாரூக்கானின் ரசிகர்களில் நிறைய பேர் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அக்ஷய் குமாரின் ரசிகர்களில் நிறைய பேர் பா.ஜ.க ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். நடிகைகளில் தீபிகா படுகோனுக்கு ஏராளமான காங்கிரஸ் ஆதரவாளர்களும் கங்கணா ராணவத்துக்கு அதிகமாக பா.ஜ.க ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்.

தமிழ் நடிகர்களைப் போல் பாலிவுட் நடிகர்கள் பேசுவதெல்லாம் அரசியல் உலகில் சர்ச்சையாகிறது. டிவிட்டர் வரவுக்குப் பின்னர் நாட்டு நடப்புகள் பற்றி நிறைய நடிகர், நடிகைகள் கருத்து தெரிவிக்கிறார்கள். அந்த பட்டியிலும் அக்ஷய் குமார், ஷாரூக்கான், தீபிகா படுகோன், கங்கணா ராணத் உள்ளிட்டவர்கள் டாப் 10 இடத்தில் இருக்கிறார்கள். இவர்களது அரசியல் ரீதியிலான கருத்துகள் மக்கள் மனதில் பேசுபொருளாக இருக்கின்றன.

ஏறக்குறைய 60 சதவீதம் பேர், அக்ஷய் குமார், ஷாரூக்கான், தீபிகா படுகோன் போன்றவர்களின் பேசும் அரசியல் கருத்துகளில் உடன்படுகிறார்கள். 20 முதல் 30 சதவீதம் பேர் அவர்களிடமிருந்து மாறுபடுகிறார்கள். கங்கணா ராணவத்தை பொறுத்தவரை 40 சதவீதம் பேர் அவரது கருத்தை ஆதரித்தும், 40 சதவீதம் பேர் அவரது கருத்தை எதிர்க்கவும் விரும்புகிறார்கள்.

63 சதவீதம் பேர் திரைப்படங்கள் கடுமையாக சென்ஸார் செய்யப்படுவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஓ.டி.டி. பிளாட்பார்மில் வெளியாகும் திரைப்படங்கள், வெப்சீரிஸ் போன்றவற்றில் அதிகபட்ச வன்முறைகள், பாலியல் வன்முறைக்காட்சிகள் இருப்பதை 53 சதவீதம் பேர் விரும்பவில்லை. அவற்றையெல்லாம் கடுமையாக தணிக்கை செய்யவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

கட்சி, கொள்கையெல்லாம் பார்த்து அரசியல் ரீதியாக நடிகர்களை ஆதரித்தாலும் ஒரு முடிவில் மட்டும் வேறுபடுகிறார்கள். சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம், அதில் அரசியல் உள்ளே நுழையக்கூடாது என்று 54 சதவீதம் பேர் விரும்புகிறார்கள். நல்ல காமெடிதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com