ஆகாசா ஏர்லைன்ஸ்
ஆகாசா ஏர்லைன்ஸ்

செல்லப் பிராணிகளுக்கு அனுமதி; ஆகாசா ஏர்லைன்ஸ் அறிவிப்பு!

நாட்டில் கடந்த ஆகஸ்ட் தொடங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம்,  இந்தியாவில் வர்த்தக விமானங்களை இயக்குகிறது.

ஆரம்பத்தில் மும்பையிலிருந்து அகமதாபாத்திற்கு விமான சேவையை தொடங்கிய இந்நிறுவனம் இப்போது கூடுதல் வழித்தடங்களில் விமானங்கள் இயக்குகிறது. இந்நிலையில், பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அகாசா ஏர் நிறுவன விமானத்தில் பயணிக்கலாம் என அறிவித்துள்ளது.

 -இதுகுறித்து ஆகாசா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது;

 அகாசா ஏர் நிறுவன விமானத்தில் பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான வசதியை அறிமுகப் படுத்தியுள்ளது. அப்படி செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்வதற்கான  முன்பதிவு அக்டோபர் 15-ம் தேதி முதல் தொடங்கப் படுகிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி முதல் ஆகாசா விமானங்களில் செல்லப் பிராணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

 -இவ்வாறு ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 விமானங்களில் செல்லப்பிராணிகளை இதுவரை ஏர் இந்தியா நிறுவனம் மட்டும் அனுமதித்து வந்தது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com