
இன்றும் (செப் 29) மற்றும் நாளையும் என இருநாள் பயணமாக குஜராத் செல்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அங்கு பல்லா யிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்ளார் திரு.மோடி.
இன்று சூரத் செல்லும் பிரதமர் மோடி, ரூ.3400 கோடிக்கு மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து பாவ்நகர் சென்று ரூ.5200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று இரவு 7 மணி அளவில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி அரங்கில் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இரவு 9மணி அளவில் ஜிஎம்சிடி மைதானத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
செப்டம்பர் 30ம் தேதி காலை 10.30 மணிஅளவில் குஜாராத்தில் காந்திநகர்-மும்பை வந்தே பாரத்எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை காந்தி நகர் ரயில்நிலையத்திலிருந்து பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
மேலும் "குஜராத் பெருமை இயக்க" நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் ரூ.3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார் பிரதமர் மோடி. ஏ.எம்.நாயக் சுகாதார கவனிப்பு வளாகம், நிராலி பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைப்பார் இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு, அங்கீகார மையத் தலைமையகத்தை தொடங்கி வைப்பார்.