நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதில்!

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

நடிகர் விஷாலின் டிவிட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ள டிவீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள, காசி விஸ்வநாதர் கோவில் அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இதனை பிரதமர் மோடி கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறந்து வைத்து காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

அக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக, நதிக்கரையில் இருந்து கோவிலை இணைக்கும் வகையில் நடைபாதை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலில் ஆன்மீக அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு மையங்கள் போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் தனது நண்பர்களுடன் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, சென்ற நடிகர் விஷால், கோயில் புனரமைப்பு  குறித்து பிரதமர் மோடியை புகழ்ந்தார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட விஷால், 'அன்புள்ள பிரதமர் மோடி ஜி, நான் காசிக்கு சென்று அற்புதமான தரிசனம் செய்தேன். கங்கா நதியின் புனித நீரை தொட்டேன். கோவிலை புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாக மாற்றி உள்ளீர்கள்.

எவரும் தரிசிக்க கூடிய வகையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’’ என தெரிவித்திருந்தார்.

இப்படி நடிகர் விஷாலின் இந்த டிவிட்டர் பதிவிற்கு பிரதமர் மோடி பதில் டிவீட் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஷால் டிவிட்டருக்கு பிரதமர் மோடியின் பதில் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com