பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: கேரளா வன்முறை!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: கேரளா வன்முறை!

Published on

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற அமைப்பின் 45 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டதில் திடுக்கிட்டு பல தகவல்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதுவரை நடந்த தீவிரவாத தடுப்பு சோதனை நடவடிக்கைகளில் இதுபோல மெகா சோதனை நடந்ததில்லை என்று சொல்ப்படுகிறது. நாடு முழுவதும் தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி உள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறையினர் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் தீவிரவாதிகளுக்கு உதவுதல், நிதியுதவி அளித்தாக சந்தேகிக்கப்படும் நபர்களின் இடங்களில் சோதனை நடத்தினர். அதில் நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினைச் சேர்ந்த சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் காரணமாக இந்த கைது நடிவடிக்கையால் இவ் அமைப்பினர் நாடு முழுவதும் சில போராட்டங்களையும், வன்முறைகளையும் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று கேரளாவில் பிஎஃப்ஐ அமைப்பினர் போராட்டத் தில் ஈடுபட்டதை உயர் நீதிமன்றம் கண்டித்து, தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. அந்த அமைப்பின் கேரள பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் மீதும் நீதிமன்றம் வழக்குப் பதிந்துள்ளது.

பொதுச்சொத்து, தனிநபர்களின் உடைமைகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com