
நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீடு கட்டும் வகையிலான ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் 2.67 லட்சம் வரையில் மானிய உதவி கிடைக்கும். இத்திட்டத்தின்கீழ் தமிழகத்திலும் பலர் வீடு கட்டப் பெற்றுள்ளனர். இந்நிலையில், இத்திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது:
நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள மக்களின் குடும்ப ஆண்டு வருமானத்தை வைத்து இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுகிறது. இதில் பயன் பெறுபவர்கள் வேறு எந்த அரசாங்க வீட்டு வசதி திட்டத்தில் பயன் அடைந்து இருக்கக்கூடாது.
அந்த வகையில் தமிழகத்தில் இத்திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் வீடு கட்டுவோருக்கு ரூ. 2.75 லட்சம் மானியம் வழங்கப்படும்.
-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.