
பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி ஏராளமான நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவிருக்கிறார். ஆப்பிரிக்காவிலிருந்து குனோ தேசியப் பூங்காவிற்கு கொண்டு வரப்படும் சிவிங்கிப் சிறுத்தைகளை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ம் தேதி தனது பிறந்த நாள் அன்று தன் கைகளால் திறந்துவிட உள்ளார்.
அவரது பிறந்ததினத்தை முன்னிட்டு பா.ஜ.க, சார்பில், 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற பெயரில் 15 நாட்களுக்கு பிறந்த நாள் விழாவாக கொண்டாட உள்ளனர்.
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சிகளின் முதன்மையான நோக்கம். நாடு முழுதும் அனைத்து மாவட்டங்களிலும் துாய்மை பணி மருத்துவ முகாம், அன்னதானம் உள்ளிட்டவைகளை பாஜகவினர் செய்து வருகின்றனர். நமோ செயலில் பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் பிரதமருக்கு தங்களது பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துளளனர்.