பிரதமர் மோடி - பினராயி விஜயன்
பிரதமர் மோடி - பினராயி விஜயன்

பிரதமர் மோடி தலையிட வேண்டும்! பினராயி விஜயன் கருத்து!

மொழி விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து
Published on

கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அறிக்கையில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்றவற்றிலும் மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இது தொடர்பான பல்வேறு விஷயங்கள் இந்த பரிந்துரையில் உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்ப்பாக பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களும் மொழிப்போரை திணிக்க வேண்டாம் என மத்திய அரசினை விமர்சித்து இருந்தது பரபரப்பை உண்டாக்கியது. இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பங்காக சில கருத்தினை தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் உள்ள அனைத்து தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசு ஊக்குவிக்க வேண்டும். உயர்கல்வியில் இந்தியை மட்டுமே பிரதான மொழியாக திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தி திணிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்” என்று மொழி விவகாரம் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com