பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தாய் மண்ணே வணக்கம்; எல்லையில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி! 

 பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளி பண்டிகையை லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கில் எல்லையில் கொண்டாடினார். அங்கு ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிப் பேசினார். 

‘’நான் பிரதமராகப் பதவியேற்ற முதன்முறையில் தொடங்கி, ஒவ்வொரு வருட தீபாவளியையும் ராணுவ வீரரகளான உங்களுடன் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். தீவிரவாதத்தை முறியடிப்பதே தீபாவளி பண்டிகையின் தாத்பர்யம் ஆகும்.

அந்த வகையில் கார்கில் போர் அதற்கு சிறந்த உதாரணம். கார்கிலில் நமது படைகள் பயங்கரவாதத்தை அழித்ததற்கு சாட்சியாக நான் இருப்பதை என அதிர்ஷ்டமாக கருதுகிறேன். உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது’’ என்று உணர்ச்சிகரமாக பிரதமர் பேசினார். 

பின்னர் வீரர்கள் இசை கருவிகளை வாசித்து ஏ. ஆர் ரஹ்மானின் ‘’வந்தே மாதரம்’’ பாடலை உற்சாகத்துடன் பாட, மோடியும் அப்பாடலுக்கு கைத்தட்டி ஆர்வத்துடன் பாடினார். இதை பிரதமர் தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் ட்வீட்டை ஏ.ஆர்.ரஹ்மான் தன் டிவிட்டரில் ரீட்வீட் செய்துள்ளார். மேலும்  '' இதயம் இதயம் துடிக்கின்றதே.. எங்கும் உன்போல் பாசம் இல்லை..ஆதலால் உன் மடி தேடினேன்.. தாய் மண்ணே வணக்கம்'' என பதிவிட்டுள்ளார் 

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com