பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

குஜராத் அரசுப் பள்ளிக்கு பிரதமர் சென்றது ஆம் ஆத்மியின் வெற்றி; அரவிந்த் கெஜ்ரிவால்!

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கு நேரில் சென்றது ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது:

டெல்லி அரசுப் பள்ளிகளில் ஆம் ஆத்மி மேற்கொண்ட முயற்சிகளால் அவை இப்போது நாட்டுக்கே மாடல் பள்ளிகளாக விளங்குகின்றன. நாட்டின் அனைத்து தலைவர்களும், எல்லா கட்சிகளும் இவற்றை முன்னுதாரணமாகப் பார்க்கத் தொடங்கியிருப்பது ஆம் ஆத்மி கட்சியின் மிகப்பெரிய சாதனை.

அந்த வகையில் குஜராத்திலுள்ள அரசுப் பள்ளிக்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டது ஆம் ஆத்மி அரசுக்கு கிடைத்த வெற்றியாகும்.

-இவ்வாறு பதிவிட்டு, அரசுப் பள்ளியில் மாணவர்களுடன் மோடி அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நேற்று பிரதமர் மோடி, குஜராத்தில் ‘மிஷன் ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ்’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் அங்குள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com