பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை; ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை!

பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி வரும் 8 ஆம் தேதி சென்னை முழுவதும் டிரோன்கள் மற்றும் வான்வழி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை தர உள்ளார். வருகின்ற 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலமாக சென்னை வந்தடைகிறார்.

பிரதமர் சென்னை வருகை ஒட்டி சென்னை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும், முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது. அதன் காரணமாக எட்டாம் தேதி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்னை நகருக்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்க சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும், வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடிற்கு வருகை தர உள்ளார். இதற்காக வரும் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார். அவரை விமான நிலையத்தில் திமுக அமைச்சர்கள், பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழ்நாடு ஆளுநர் மற்றும் கட்சிப் பிரதிநிதிகள் வரவேற்க உள்ளனர். மேலும் விமான நிலையத்தில் இருந்து பாஜக தொண்டர்கள் மூலம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து சேலம் வரை செல்லும் ’வந்தே பாரத்’ ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்த பின்னர், பல்லாவரம் பகுதியில் பொதுமக்களிடம் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மீண்டும் தனி விமானம் மூலம் கேரளாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்கிறார்.

பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறை சார்பாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும், முக்கிய வழித்தடங்களில் ஐந்து அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை முழுவதும் ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com