பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பக்தியுடன் சிவனை வணங்கிய பிரதமர் ! கேதார்நாத் சென்றார்!

உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு பாரம்பரிய ஆடைகளையும் வழங்கினார். கேதர்நாத் பகுதியில் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர். அங்கேயுள்ள ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கும் சென்று வழிபட்டார். அங்கு கோயில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார்.

கேதார்நாத்
கேதார்நாத்

முன்னதாக கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான 'சோழா டோரா' அணிந்திருந்தார்.கேதர்நாத் கோயிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உடன் வந்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பக்தியுடன் சிவனை வழிப்பட்டார் பிரதமர் மோடி. பிரதமரின் வருகையையொட்டி கேதார்நாத் கோவிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com