பிரதம மந்திரியின் கிஸான் யோஜனா திட்டம்: ஆறாயிரம், எட்டாயிரமாகிறது - விவசாயிகளுக்கு பட்ஜெட் தரப்போகும் இனிப்பான செய்தி!

பிரதம மந்திரியின் கிஸான் யோஜனா திட்டம்: ஆறாயிரம், எட்டாயிரமாகிறது - விவசாயிகளுக்கு பட்ஜெட் தரப்போகும் இனிப்பான செய்தி!

பிரதமரின் கிஸான் சம்மான் நிதியின் முலம் இனி ஆண்டுக்கு எட்டாயிரம் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. விலைவாசி உயர்வு போன்றவற்றால் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு கூடுதலாக வழங்கப்படும் இரண்டாயிரம் ரூபாய் உதவிகரமாக இருக்கும். அரசுக்கான நிதி வருவாய் அதிகரித்து வருவதால் இதுவொரு கூடுதல் சுமையாக இருக்காது என்கிறார்கள்.

பிரதமரின் கிஸான் யோஜனா திட்டம், 2019ல் அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மூன்று தவணைகளில் இரண்டாயிரம் ரூபாயாக சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் 2 ஹெக்டேருக்கு குறைவான விவசாயிகளுக்கு மட்டுமே இது வழங்கப்பட்டது. பின்னாளில் 14.5 கோடி விவசாயிகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

எம்.பி. எம்.எல்ஏவாக இருந்தவர்களின் குடும்பத்தினருக்கோ, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுவபவர்கள், டாக்டர், என்ஜினியர், வழக்கறிஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டது.

பிஎம் கிஸான், முழுவதும் மத்திய அரசின் திட்டம். ஆனாலும், திட்டத்தின் பயனாளிகளை கண்டறிந்து, திட்டத்தை சேர்க்க வேண்டிய பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். திட்டத்தில் சேர, விவசாயிகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம். இதற்கென தனியாக ஒரு இணையத்தளம் செயல்பட்டு வருகிறது.

கொரானா பரவல் இருந்தபோது, தமிழ்நாட்டில் அதிகளவில் விவசாயிகள் இத்திட்டத்தில் பங்கேற்றார்கள். அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. பதிவு செய்யப்பட்ட தகுதியற்ற பயனாளிகளின் வங்கி கணக்குகளை முடக்கி, நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட வங்கிகளின் மூலமாக தொகையை மீட்டெடுத்து, வழிகாட்டு நெறிமுறைகளின்படி, அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தகுதியற்ற பயனாளிகளிடமிருந்து உதவி தொகையை வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் வசூல் செய்து, அரசுக்கணக்கில் செலுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com