'புதிய நண்பர்கள்' பிரியங்கா காந்தி வெளியிட்ட க்யூட் படங்கள்!
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராகுல்காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி வாத்ரா, கர்நாடக தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் தொகுப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எப்படியாவது இழந்த ஆட்சியை மீட்டுவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி முனைப்புடன் பிரசாரம் செய்தது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார். 13 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மாநில அரசின் ஊழல், நிர்வாகத்திறமை இன்மை, மக்கள் பிரச்னைகளை பொம்மை அரசு கண்டுகொள்ளாத்து உள்ளிட்ட மாநில பிரச்னைகளை முன்வைத்தே பிரசாரம் செய்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்துக்கு பலன் கிடைத்தது. தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தின்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பிரியங்கா இன்ஸ்டா கிராமில வெளியிட்டுள்ளார். அவற்றில் ஒன்று இணையதள பயனார்களை வெகுவாக கவர்ந்தது. அந்த புகைப்படத்தில் ஒன்று யானை துதிக்கையால் பிரியங்காவின் தலையில் ஆசிர்வதிப்பது. பிரியங்காவுடன் புன்னகையுடன் அதை
ஏற்றுக்கொண்டார். இந்த விடியோ வெளியான உடனேயே 4,000 பேர் அதற்கு லைக்ஸ் போட்டுள்ளனர். பலர் இதயபூர்வமாக பிரியங்காவையும் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியையும் வாழ்த்தினர்.
யானை ஆசிர்வதிக்கும் விடியோவின் கீழ் “கர்நாடகத்தில் எனக்கு கிடைத்த புதிய நண்பர்கள்” என்று விளக்கம் அளித்திருந்தார். மற்றொரு புகைப்படத்தில் யானையின் துதிக்கையை தமது கையால் தடவிக் கொடுக்கிறார் பிரியங்கா. இந்த புகைப்படமும், உள்ளூர் மக்களுடன் பிரியங்கா நடத்தும் உரையாடலும் இணையதள பயனாளர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
“ஓ மை காட்”…. என்ன அருமையான புகைப்படம் என்று ஒருவரும். “அழகு மிளிரும் பிரியங்காவுக்கு வாழ்த்துக்கள்” என்று மற்றொருவரும் கருத்து வெளியிட்டுள்ளார்.
தென் மாநிலத்தில் தனக்கு இருந்த ஒரே இடத்தையும் பா.ஜ.க. இந்த தேர்தலில் இழந்துவிட்டது. அக்கட்சி 66 இடங்களையே பிடிக்க முடிந்தது. காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளதுடன் வாக்கு சதவீத்த்தையும் அதிகரித்துக் கொண்டுள்ளது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு 19 இடங்களே கிடைத்தன.