வாகனத்தின் மேல் நின்று பிரச்சாரம்; தடுமாறிய விழுந்த பாலகிருஷ்ணா!

வாகனத்தின் மேல் நின்று பிரச்சாரம்; தடுமாறிய விழுந்த பாலகிருஷ்ணா!

நடிகரும், எம்எல்ஏவுமான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது சொந்த தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அவர் சென்றுக்கொண்டிருந்த வாகனம் திடீரென வேகமெடுத்ததில் அவர் சற்றே நிலை தடுமாறியுள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும் தெலுங்குபட நடிகருமானவர் என்.டி. ராமராவ். இவரது இளைய மகன் நடிகர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மட்டுமின்றி ஆந்திரபிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தன்னுடைய சொந்த தொகுதியான இந்துபூரில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு தொண்டர்கள், ரசிகர்களைப் பார்த்து கைகளை அசைத்து நன்றி கூறியும், அவர்களுடைய வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டும் இருந்தார்.

இந்நேரத்தில் மெதுவாகச் சென்றுகொண்டிருந்த அவரது பிரச்சார வாகனம், ஓட்டுனரின் கவனக்குறைவால் அவரது கால் பிரேக்கில் வைப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரில் வைத்துவிட வாகனம் சற்று வேகம் எடுத்துள்ளது. இதனால் வாகனத்தின் மீது நின்று கொண்டிருந்த பாலகிருஷ்ணா பக்கத்தில் பிடிமானம் ஏதும் இல்லாததினால் திடீரென்று நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே பாலகிருஷ்ணா உடன் இருந்தவர்கள் அவரை தாங்கிப்பிடித்து கொண்டனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாலகிருஷ்ணாவுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. சற்று நேர ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடர்ந்தார். தெலுங்கு தேசிய கட்சி சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கலந்துக்கொண்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com