பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு. ஜே.என்.யு மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம்!

பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கு எதிர்ப்பு. ஜே.என்.யு மாணவர்கள் நள்ளிரவில் போராட்டம்!

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பி.பி.சி ஆவணப்படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டிருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி அலைபேசிகளில் ஆவணப்படத்தை பார்த்தவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநிலத்தின் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தார். இந்த கலவரம் தொடர்பாக பி.பி.சி. கடந்த 17 ஆம் தேதி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப் படத்தில் பிரமதர் மோடிக்கான கேள்விகள் என்னும் தலைப்பில், அவருக்கு எதிரான சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பி.பி.சி.யின் இந்த ஆவணப் படத்தை யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட மத்திய அரசு கடந்த 18 ஆம் தேதி தடை விதித்தது. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் பி.பி.சி ஆவணப்படம் தொடர்பான கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. அத்துடன் பி.பி.சி ஆவணப் படத்துக்கான இணைப்பும் பதிவிடப்படுவதாக கூறப்படுகிறது. இவற்றுக்கும் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இதனிடையே தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பற்றிய பி.பி.சி ஆவணப் படத்தை திரையிட சில மாணவர்கள் திட்டமிட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதையும் மீறி அலைபேசிகளில் ஆவணப்படத்தை பார்த்த மாணவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது.

கல்வீச்சு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து ஜே.என்.யு. மாணவர்கள் வசந்த் குஞ்ச் காவல்நிலையத்துக்கு பேரணியாகச் சென்று நள்ளிரவில் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பதற்றமான நிலை உருவானதால் ஜே.என்.யு. வளாகத்துக்கு எதிரே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com