புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!

லைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்துக்காக புதிய கட்டடம் கட்டப்பட்டு, வரும் 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடம் இந்தியாவின் முதல் குடிமகன் என்ற பெருமை பெற்ற குடியரசு தலைவரால்தான் திறந்துவைக்கப்பட வேண்டும் என்று கூறி, திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்பைத் தெரிவித்திருப்பதோடு, இந்தப் புதியக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்காமல் புறக்கணிக்கப்போவதாகவும் கூறி வருகின்றன.

இந்த நிலையில், ‘நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என மக்களவை செயலகம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்தப் பொதுநல வழக்கு குறித்து வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் தாக்கல் செய்திருக்கும் மனுவில், ‘குடியரசுத் தலைவரை பதவியேற்பு விழாவில் இருந்து விலக்கி இருப்பதன் மூலம் மத்திய அரசு, இந்திய அரசியலமைப்பையே மீறி உள்ளது. மேலும், இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத செயலாகும்’ என்று குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களே இருக்கும் நிலையில், இந்த மனுவின் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்துக்கு உடனே வரும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com