புனித் ராஜ்குமார்
புனித் ராஜ்குமார்

புனித் ராஜ்குமாருக்கு “கர்நாடக ரத்னா" விருது! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்பு!

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக அரசின் உயரிய விருதான “கர்நாடக ரத்னா' விருது வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார்.ரஜினிகாந்த் பெங்களூரு வந்தபோது சுகராதரத்துறை அமைச்சர் அவரை வரவேற்றார்.

நேற்றைக்கு நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பல்வேறு முன்னணி நடிக, நடிகைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - புனித் ராஜ்குமார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - புனித் ராஜ்குமார்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ( 46) , கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கர்நாடகாவின் முன்னணி நடிகரான அவரது நினைவிடம் அமைந்துள்ள காண்டிவரா மைதானத்தில் தொடர்ச்சியாக இப்போதும்கூட ரசிகர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அதோடு, அவரது கண்கள் தானம் செய்யப்பட்டதால் கடந்த 15 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கர்நாடகாவில் கண்தானம் செய்துள்ளனர். இந்த நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு "கர்நாடக ரத்னா' விருது வழங்கப்படும் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com