பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

புரசை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் சீல்!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது ஏற்கனவே அமலாக்க துறை பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தது. இது தொடர்பாக நாடெங்கும் வன்முறை மற்றும் கலவரங்களும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. பல பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதும் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதும் நடைபெற்றது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் சீல்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் சீல்

இந்நிலையில் பி.எப்.ஐ., அமைப்புக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளது என அறிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பையும், அதன் தொடர்புடைய அமைப்புகளுக்கும் 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்திற்கு இன்று சீல் வைக்கப்பட்டது பரபரப்பை கிளப்பியது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com