ராகுல் காந்தி நடை பயணம் இன்று திடீர் நிறுத்தம்!

ராகுல் காந்தி நடை பயணம் இன்று திடீர் நிறுத்தம்!

 காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல்காந்தி பாத யாத்திரையை இன்று ஒருநாள் நிறுத்திவிட்டு டெல்லி  செல்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 காங்கிரஸ் கட்சி எம்.பி-யான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான  இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் தொடங்கினார். நேற்று 15-வது நாளாக கேரள மாநிலத்தில் பாதயாத்திரை சென்றார்.

இந்நிலையில்காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது.

 இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியுடன் இத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ராகுல் காந்தியுடன் பாதயாத்திரை நடத்தி வரும் கே.சி. வேணுகோபால் எம்.பி.-யை டெல்லிக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் 2 நாட்களுக்கு முன்பு அவசரமாக கொச்சியில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். இதனிடையே சிகிச்சைக்கு பின் நாடு திரும்பிய சோனியா காந்தியை பார்ப்பதற்காகவும், கட்சியின் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளவும் ராகுல் காந்தி இன்று தனது நடைபயணத்தை ஒருநாள் நிறுத்திவிட்டு ராகுல் காந்தி டெல்லி செல்கிறார்.

 டெல்லியில் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு ராகுல் காந்தி மீண்டும் கேரளாவுக்கு வந்து நாளை காலை 7 மணிக்கு சாலக்குடியில் இருந்து தனது பாதயாத்திரையை தொடங்குவார் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com