மீண்டும் எம்பி ஆனார் ராகுல் காந்தி: காங்கிரஸார் கொண்டாட்டம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு அவரிடமிருந்து பறிக்கப்பட்ட எம்.பி பதவியை மீண்டும் மக்களவை செயலகம் வழங்கியுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து விமர்சித்ததாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ராகுல் காந்தி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். அதில், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவால் பறிக்கப்பட்ட ராகுல் காந்தியின் எம்பி பதவியை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

மேலும் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறிப்பதற்கு காட்டிய வேகத்தை தற்போது வழங்குவதில் சபாநாயகர் காட்ட வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதனைதொடர்ந்து கடிதத்தைப் பெற்றுக் கொண்ட சபாநாயகர் மக்களவை செயலரை அணுக காங்கிரஸ் கட்சிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்த உத்தரவை திரும்பப் பெறுவதாக நாடாளுமன்றச் மக்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நாளை முதல் ராகுல் காந்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி தனது கருத்தை பதிவு பதிவு செய்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கடும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்பி வழங்கப்பட்டு இருப்பது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நாடாளுமன்ற வளாகத்தில் சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார். மீண்டும் எம்பி வழங்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்யு அளித்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த ராகுல்காந்தி வாயிலில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையில் மலர்தூவி மரியாதை செய்துவிட்டு அவை நடவடிக்கைகளை பங்கேற்க சென்றார். மேலும், ராகுல்காந்தியின் எம்பி மீண்டும் கிடைத்ததை அடுத்து ட்விட்டர் வலைத்தளத்தில் Rahul is back எனும் ஹாஷ்டேக் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com