ஆதாரை ஆன்லைனில் அப்டேட் செய்ய வேண்டுமா? இதை படிங்க ....!
இந்தியாவில் இன்று தேவைப்படும் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஆதார் கார்டு, அனைத்து விதமான பரிவர்த்தனைகளிலும் பயன்படுகிறது. எந்த விதமான மத்திய மற்றும் மாநில அரசு சலுகைகளை பெறுவது முதல் , பள்ளி, கல்லூரி வரையில் அனைத்து இடங்களிலும் அத்தியாவசியமான ஒன்றாக இருப்பது ஆதார் கார்டே. ஆதார் கார்டில் தேவைப்படும் முகவரி மாற்றம், மொபைல் நம்பர் மாற்றம், பிறந்த தேதியில் மாற்றம் என பலவற்றையும் ஆன்லைனிலேயே அப்டேட் செய்து கொள்ளும் வசதிகள் உள்ளது.
ஆதாரை ஆன்லைனில் அப்டேட் செய்யும் வழிமுறைகள்:
ஆதார் பதிவு செய்த நம்பரை கையில் அவசியம் வைத்திருக்க வேண்டும். அதில் தான் OTP வரும்.
UIDAIயின் https://ask.uidai.gov.in/#/ என்ற தளத்திற்கு செல்லவும். அடுத்ததாக உங்கள் மொபைல் எண் மற்றும் கேப்ட்சா எழுத்தினை பதிவு செய்து, Send OTP என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியினை கொடுத்து சப்மிட் ஓடிபி & Proceed என்பதை கொடுக்கவும். அது அடுத்ததாக மற்றொரு பக்கத்தில் தொடங்கும்.
இதில் ஆன்லைன் ஆதார் சேவைகள் என்று இருக்கும். அதில் கீழாக அப்டேட் ஆதார் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.
உங்களது பெயர், ஆதார் நம்பர் உள்ளிட்டவற்றை கொடுத்து விட்டு, உங்களது resident type-யினையும் கிளிக் செய்ய வேண்டும்.
அதன் கீழாக what do you want to update என்ற பிரிவில் பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபல் நம்பர், இமெயில் ஐடி, முகவை, பயோமெட்ரிக் என்பதில் எதனை மாற்ற வேண்டுமோ அதனை கிளிக் செய்து Proceed என்பதை கொடுக்க வேண்டும்.
அதில் மொபைல் நம்பரை மாற்ற மொபைல் எண் என்பதை கிளிக் செய்ய வேண்டும். உடனே ஓடிபி வரும். இது மற்றொரு பக்கத்தில் தொடங்கும். அங்கு உங்களது புதிய மொபைல் நம்பரை கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு கீழாக உள்ள கேப்ட்சா எழுத்தினை கொடுத்து Save and proceed என்ற ஆப்சனை கொடுக்க வேண்டும். உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும்.
இதனை விவரங்களை ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து விட்டு கொடுக்கவும். இதன் பிறகு ஆன்லைனிலேயே அப்பாயின்ட்மென்ட் ஐடி-யுடன்sucess என்ற திரையில் வரும்.
அதில் Book Appointment என்ற விருப்பத்தினை பதிவு செய்து அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தினை கொடுக்கவும். அங்கு அப்டேட் செய்யப்பட்ட பின்னர் இந்த விவரங்கள் உங்களது ஆதார் பக்கத்தில் 90 நாட்களுக்குள் அப்டேட் ஆகிவிடும்.

ஆதாரை ஆஃப்லைனில் மற்றும் வழிகள்:
பதிவு செய்த மொபைல் எண் இல்லை என்றால், ஆப் லைனில் தான் மொபைல் நம்பரை மாற்றம் செய்ய முடியும்.
இதற்காக அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்லவும். அங்கு ஆதார் அப்டேட் செய்யும் பார்மினை பூர்த்தி செய்து, புதியதாக அப்டேட் செய்யப்பட வேண்டிய மொபைல் நம்பரை கொடுங்கள்.
அதனை ஆதார் மைய நிர்வாகிகள் URN மூலம் அப்டேட் செய்து கொள்வார்கள். இதற்காக நீங்கள் 25 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.