2000 நோட்டுகள் 88% திரும்ப வந்துவிட்டது.. ரிசர்வ் வங்கி!

 மத்திய ரிசர்வ் வங்கி
மத்திய ரிசர்வ் வங்கி

நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88 சதவீதம் திரும்பப் பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த மே மாதம் 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தது.அதுவரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனையில் செல்லும் எனவும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்தது.

மே 19-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் மொத்தம் 3 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இதில், 3 லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிகள் மூலம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 88 சதவீத நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளதாகவும், 42 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. பெறப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டவை என்றும், 13 சதவீதம் நோட்டுகள் மாற்றப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.கூடுதல் கால அவகாசம் வழங்குவதா, வேண்டாமா என செப்டம்பர் மாத இறுதியில் முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com