அரிசி தட்டுப்பாடு எதிரொலி: ஏற்றுமதி தடையை நீக்க கோரி இந்தியாவுக்கு சிங்கப்பூர் கோரிக்கை!

மாதிரி படம்
மாதிரி படம்

பாஸ்மதி இல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது இந்தியா.  இந்த தடையிலிருந்து  சிங்கப்பூருக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு இந்தியாவிற்கு சிங்கப்பூர் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது நிலவும் அரிசி பற்றாக்குறையின் காரணமாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி பாஸ்மதி இல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய இந்திய அரசு தடை விதித்தது. அரிசி உற்பத்தியில் இந்தியா இந்தியா பிரதான பங்கு வைக்கிறது. உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அரிசிகளில் 40 சதவீதம் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தியாவின் அரிசியை நம்பியே பல்வேறு உலக நாடுகள் உள்ளன.

பருவநிலை மாற்றம், வடமாநிலங்களில் பெய்த தொடர் மழை, தென் மாநிலங்களில் மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சி போன்ற காரணங்களால் இந்தியாவில் அரிசி உற்பத்தி குறைய தொடங்கியது. இதைத் தொடர்ந்து இந்தியாவினுடைய அரிசி  கையிருப்பு விகிதமும் குறைந்தது. இதனால் இந்தியாவில் அரிசி கிலோவிற்கு  10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. மேலும் விலை உயரக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் அரிசி பற்றாக்குறை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக மக்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உள்நாட்டு தேவையை கருத்தில் கொண்டு இந்தியா பாஸ்மதி அல்லாத மற்ற வகை அரிசிகளை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. இதனால் அமெரிக்காவில் மிகப்பெரிய அரிசி பஞ்சம் தற்போது நிலவுகிறது. அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்களிடையே கடுமையான போட்டியின் நிலவுகிறது.

சிங்கப்பூரும் இந்தியாவின் அரிசியை நம்பியே இருப்பதால் இந்தியாவின் அரிசி ஏற்றுமதிக்கான தடை சிங்கப்புரை மிகப்பெரிய அளவில் பாதித்திருக்கிறது. இதனால் சிங்கப்பூரில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த மக்களின் முக்கிய உணவுப் பொருளாக அரிசி இருப்பதால் இந்திய அரசு சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதிக்கான தடை உத்தரவை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு சிங்கப்பூர் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com