தனியார் கிரிப்டோகரன்சிகளால் ஆபத்து - ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

தனியார் கிரிப்டோகரன்சிகளால்  ஆபத்து  - ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை!

னியார் கிரிப்டோகரன்சிகளால்தான் நிதி நெருக்கடியானது  ஏற்படப் போகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். அதனால் உடனே கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கிரிப்டோகரன்சிகள் நிதி நிலைக்கு மிகுந்த ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்றும், அதனால் கிரிப்டோகரன்சி பயன்பாட்டுக்கு சட்ட அனுமதி வழங்கக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளுக்கு மத்திய அரசு 30% வரி விதித்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு 40 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாக சக்திகந்தா தாஸ் தெரிவித்துள்ளார். தனியார் கிரிப்டோகரன்சிகள் தற்போது நடைமுறையில் இருக்கும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி அமைப்புக்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கின்றன. 

அடுத்ததாக, கிரிப்டோகரன்சிகளில் எந்தவொரு மதிப்பும் அதில் இடம் பெறவில்லை. அவற்றால் பொது நன்மைகள் என்ன என்ற தெளிவும் இல்லை. முழுக்க முழுக்க யூகங்களின் அடிப்படையிலேயே கிரிப்டோகரன்சிகள் ஏறி இறங்குகின்றன. அதனால் இது ஒரு பெரிய ஆபாயமாக உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ரிசர்வ் வங்கியே அண்மையில் சொந்தமாக டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே மொத்த பரிவர்த்தனைகள் மற்றும் சில்லறை பரிவர்த்தனைகளுக்கு சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாய் பயன்பாட்டை ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது. இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்பாடு என்பது முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானதாகும்.

இதனால் டிஜிட்டல் ரூபாயின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும். டிஜிட்டல் ரூபாயால் இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மேலும் புது உத்வேகம் பெறுவது மட்டுமல்லாமல், நோட்டு அச்சடிப்பதற்கான செலவுகளும் ஓரளவு குறைந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com