'ஓணம் சத்யா'வழங்கத் தவறிய உணவகத்திற்கு ரூ.40,000 ஃபைன்! நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

'ஓணம் சத்யா'வழங்கத் தவறிய உணவகத்திற்கு ரூ.40,000 ஃபைன்! நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு!

திருவோண நாளில் மலையாளிகளின் ஸ்பெஷல் விருந்தான “ஓணம் சத்யா” வழங்காத உணவகத்திற்கு இழப்பீடாக ரூ.40,000 வழங்குமாறு எர்ணாகுளம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வைட்டிலாவைச் சேர்ந்த பிந்தியா வி சுதன் என்பவர், வைட்டிலாவில் உள்ள மேஸ் உணவகமானது தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்த புகாரின் பேரில் டி.பி.பினு தலைமையிலான நுகர்வோர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. புகாரின்படி, பிந்தியா சுதன், 1295 ரூபாயை முன்பணமாக செலுத்தி ஐந்து பேருக்கு ஓணம் சத்யாவை முன்பதிவு செய்துள்ளார். இந்த உத்தரவை ஏற்றுக்கொண்டபோது, ஆகஸ்ட் 21, 2021 அன்று புகார்தாரரின் பிளாட்டுக்கு சத்யா வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இருப்பினும், நொண்டிச் சாக்குகளைக் கூறி, பணத்தைத் திருப்பித் தருவதாக ஒப்புக்கொண்டு சத்யா வழங்கப்படவில்லை. அதனால் பிந்தியா சுதன் ஏமாற்றத்துக்கு உள்ளானார். தனக்கு ஏற்பட்ட மன வேதனை மற்றும் உடல் ரீதியான கஷ்டங்களுக்கு அவர் உணவகத்திடம் இருந்து இழப்பீடு கோரினார்.

விருந்தாளிகளை மதிய உணவிற்கு அழைத்ததால் ஓணம் தினத்தன்று டெலிவரி செய்ய ஐந்து சத்யாக்களை முன்கூட்டியே ஆர்டர் செய்ததாகச் சொன்னாள். டெலிவரியின் நிலையைப் பற்றி உணவகத்திற்கு பலமுறை அழைப்புகள் விடுத்து விசாரித்த போது கூட, அவர்கள் அன்று மதியம் 12.30 மணிக்குள் சிறப்பு உணவு டெலிவரி செய்யப்படும் என்றே உறுதியளித்தனர். ஆனால், டெலிவரி மிகவும் தாமதமானது. பிந்தியா மீண்டும் உணவகத்தைத் தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் பதில் கிடைக்கவில்லை.

"விருந்தினர்களை சத்யாவிற்கு அழைத்து, நீண்ட நேரம் காத்திருந்தும், 'சிறப்பு ஓணம் சத்யா' உணவு கிடைக்காதது, மிகவும் ஏமாற்றமளிப்பதாக, நுகர்வோர் நீதிமன்றம் கூறியது. எனவே, எதிர் தரப்பினர் (உணவகம்) சேவையை வழங்குவதில் உள்ள குறைபாட்டை ஈடுசெய்யும் வகையிலு வாடிக்கையாளருக்கு நிகழ்ந்து விட்ட மிகப்பெரிய மன ரீத்யிலான துன்புறுத்தல் மற்றும் மன வேதனையை ஈடுசெய்யும்." வகையிலும் மேற்கண்ட இழப்பீட்டுத் தொகையை பிந்தியாவுக்கு வழங்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது.

அத்துடன், நுகர்வோர் நீதிமன்றம் சத்யா செலவுக்கு ரூ.1,295 மற்றும் நடைமுறைச் செலவுக்கு ரூ.5,000 ஆகியவற்றைத் திரும்பப்பெறவும் உத்தரவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com