சாமியேய்.. சரணம் ஐயப்பா; இருமுடி கட்டி விமானத்தில் செல்ல அனுமதி!

பக்தர்கள்
பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி விமானத்தில் செல்வதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள்  இருமுடியை எடுத்துச் செல்வது வழக்கம். அந்த இருமுடிப் பையில், நெய் நிரப்பப்பட்ட தேங்காய், அரிசி, இதர காணிக்கை பொருட்கள் ஆகியவை இருக்கும். இந்நிலையில் நெய் உள்ளிட்டவை எளிதில் தீப்பிடிக்கக்கூடியது என்பதால், விமானத்தில் சபரிமலை பக்தர்கள் இருமுடி கொண்டு செல்ல அனுமதிக்கப் படுவதில்லை.

இந்நிலையில் இந்த வருட சபரிமலை சீசனில் ஜனவரி 20-ம் தேதிவரை விமானத்தில் தேங்காய்களை கொண்டு செல்ல சிவில் விமான போக்குவரத்து பிரிவு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து சிவில் விமான போக்குவரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது;

விமானத்தில் பயணிகள் தங்களுடன் குறிப்பிட்ட எடை அளவு கொண்ட கைப்பையை கொண்டு செல்ல அனுமதிக்கப் படுவர். அந்த அடிப்படையில் இருமுடிப் பையை பக்தர்கள் தங்களுடன் விமானத்தில் எடுத்துச் செல்ல இந்த வருடம் அனுமதிக்கப் படுகின்றனர்.

இதையொட்டி, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு, பக்தர்கள் இருமுடிப் பையை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

சபரி மலையில் மண்டல - மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதிவரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படுவர் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com