ஒரே பாலின திருமணமா? சட்டப்படி தப்பில்லை, ஆனால் திருமணமாக அங்கீகரிக்க முடியாது, மத்திய அரசு திட்டவட்டம்!

ஒரே பாலின திருமணமா? சட்டப்படி தப்பில்லை, ஆனால் திருமணமாக அங்கீகரிக்க முடியாது, மத்திய அரசு திட்டவட்டம்!

ஒரே பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க முடியாது என்றும், அங்கீகாரம் அளித்தால் சமூகத்தில் தேவையில்லாத குழப்பங்களை உருவாக்கிவிடும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இவையனைத்தும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, தற்போது விசாரணையில் உள்ளன.

இது குறித்து மத்திய அரசு, தன்னுடைய கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அதில் லிவிங் டுகெதராக சேர்ந்து வாழ்பவர்கள் குறிப்பாக ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்வது, பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது போன்றவை இந்தியாவின் குடும்ப அமைப்புக்கு எதிரான விஷயம் என்றும் அதன் காரணமாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அதையெல்லாம் அங்கீகரிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

பயோலஜிக்கல் ஆணும் பயோலஜிக்கல் பெண்ணும் இணைந்து வாழ்வதைத்தான் குடும்பம் என்று குறிப்பிடவேண்டும். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளைத்தான் வாரிசுகள் என்று அங்கீகரிக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களின் திருமணத்தை அடிப்படை உரிமையாக கொள்ளமுடியாது என்றாலும் சட்டத்திற்கு புறம்பானவையாக கருத வேண்டியதில்லை என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதாவது, லிவிங் டுகெதார், ஒரின சேரிக்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வது சட்டப்படி தவறில்லை. ஆனால், அவ்வாறு சேர்ந்து வாழ்வதை திருமணம் என்று அங்கீகரிக்க முடியாது.

இந்து திருமணச் சட்டத்தின்படி ஒவ்வாரு ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்பம் என்னும் அமைப்பில் சில கடமைகள் இருக்கின்றன. அதே போல் இஸ்லாம் உள்ளிட்ட மதங்களிலும் அத்தகைய திருமண நடைமுறைகள் இருக்கின்றன. ஆகவே, ஒரின சேர்க்கையாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று தன்னுடைய தரப்பு வாதத்தை மத்திய அரசு முன்வைத்திருக்கிறது,

கலாச்சார, பண்பாட்டியல் ரீதியாக எதிர் பாலினத்தவர்களோடு இணைந்து வாழ்வதுதான் திருமணம். அத்தகைய திருமணம் என்னும் கருத்தியலை குலைக்கக்கூடிய அல்லது நீர்த்துப் போகக்கூடிய செயலை செய்வது சரியாக இருக்காது என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.

தற்போதைய திருமணச் சட்டங்களின் கட்டமைப்பிற்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியதால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கலாமா என்பது குறித்த இறுதித் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாகலாம். எதுவாக இருந்தாலும சமூகத்தில் அதுவொரு விவாதத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com