#Breaking ... புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை ! கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!

பள்ளி
பள்ளி

புதுச்சேரியில் நாளை முதல் 26 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் புதிய அறிவிப்பை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்த விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுவையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதை தடுக்கும் நோக்கில் இந்த விடுமுறை அறிவிக்க பட்டுள்ளது.

புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சளி, காய்ச்சல் புதுவையில் கடந்த சில நாட்களாக சிறியவர், பெரியவர் என அனைத்து தரப்பினரும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக புதுவை சுகாதாரத்துறை தெரிவித்த தகவலில் 24 மணிநேர சிகிச்சை புதுவை மாநிலத்தில் மழைக்காலத்தில் பொதுவாக பரவும் வைரஸ் காய்ச்சல் (ப்ளூ) தற்போது பரவி வருகிறது. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டதால் கடந்த 2 வருடங்களாக பரவக்கூடிய மழைக்கால காய்ச்சல் குறைவாக இருந்தது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும், கூட்ட நெரிசல்களில் செல்வதாலும் இந்த மழைக்காலத்தில் பரவும் சாதாரண வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையை சமாளிக்க புதுவை சுகாதாரத்துறை புதுவை, காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளிலும் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரியிலும், ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலும், காய்ச்சலுக்கான பிரத்யேக வெளிப்புற சிகிச்சையும், உள்புற சிகிச்சை வார்டும் 24 மணிநேரமும் தற்போது இயங்கிக் கொண்டுள்ளது.

புதுவையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக புதுச்சேரி கல்வித்துறையால் அறிவிக்க பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com