திருப்பதி கோவில்
திருப்பதி கோவில்

திருப்பதி கோவிலில் இன்று  ‘விஐபி-க்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் இன்று விஐபி-க்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அக்கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்படும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறள்ளது. அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வந்து குவிவார்கள் என்பதால், பக்தர்களின் தரிசனத்துக்கு பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் போர்டு வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று திருப்பதி கோவில் வளாகத்தைத் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால், இன்று வி.ஐ.பி-க்களுக்கான சிற்ப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலை, திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, இன்று காலை  6 மணி முதல், மதியம் 12 மணி வரை கோவிலாழ்வார் திருமஞ்சனம் எனப்படும் கோவில் வளாககத்தை தூய்மை செய்யும் பணி நடக்கிறது. இதனால், வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.  இதை, பக்தர்கள் கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com