சபரி மலையில் சுவாமி தரிசன நேரம் நீட்டிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோயில்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று முதல் இரவு 11.30 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில், மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் தினசரி 60 ஆயிரம் முதல் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்களுக்கு, பல்வேறு இடங்களில்,உடனடி முன்பதிவு மையங்களும் செயல்பட்டு வருகின்றன. பக்தர்களின் அதிகரிப்பை தொடர்ந்து, கோவில் நடை திறப்பு நேரத்தை காலையிலும் மாலையிலும் தலா 1 மணி நேரம் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. அதன்பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த நிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இதனால் 18-ம் படி ஏறவும், ஐயப்பனை தரிசனம் செய்யவும் சுமார் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வருகிற 27-ம் தேதி மண்டல பூஜை நெருங்கி வருவதால் அன்றைய தினம் தரிசனத்திற்கு ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய இன்று முதல் இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சபரிமலை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com