நடிகர் சோனு சூட்டுக்கு ஒரு கோயில்!

மும்பை பரபர
நடிகர் சோனு சூட்டுக்கு ஒரு கோயில்!

ந்தியா முழுவதும் கொரோனா லாக்டவுன் இருந்த சமயம், ஏழை மக்கள்; மாணவர்கள்; புலம் பெயர்ந்த தொழிலாளர்களென பலருக்கும் நிதி உதவி; விமானப் பயணச் செலவு; பஸ் வசதி என்று பல்வேறு உதவிகளை ஆர்வத்துடன்  அளித்து நாடு முழுவதும் பிரபலமடைந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்.

தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவி செய்ய அறக்கட்டளை ஒன்றையும், திரைப்பட வாய்ப்பைத் தேடி வருபவர்களுக்காக மும்பையில் தனி அலுவலகமும் நடத்தி வருகிறார்.

மருத்துவ வசதி, கல்வி வசதி கிடைக்கப் பெறாத ஏழை மக்களுக்கு உதவும் அறப்பணி இன்றும் தொடர்ந்து வருகிறது. இவரை, ரசிகர்கள் கடவுளாக காண்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்திலுள்ள சித்திப்பேட்டை மாவட்டத்தில் ‘செல்பிதாண்டா’ என்கிற கிராமத்து ஆதிவாசி மக்கள் இவருக்காகக் கோயில் கட்டியுள்ளனர். அதில் அவருடைய சிலையையும் வடிவமைத்து வைத்துள்ளனர்.

ஆதிவாசி மக்களின் அழைப்பை ஏற்று சோனு சூட் அக்கிராமத்துக்குச் செல்ல, அங்கு அவருக்குசிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலுக்குச் சென்று தனது சிலையைப் பார்த்து நெகிழ்ச்சி அடைந்த அவர், ஆதிவாசி மக்களிடம், “நான் கடவுள் இல்லை. உங்களைப் போன்று ஒரு மனிதன்தான். இந்தக் கிராமத்துக்கு எந்தவிதமான உதவிகள் தேவைப்பட்டாலும் செய்துதர நான் கடமைப் பட்டுள்ளேன். உங்களது அன்புக்கு நன்றி” எனக் கூறி விடைபெற்றுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com