மும்பையில் லீவ்ங் டூ கெதர் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய கொடூரம்! காதலன் கைது!

அப்தாப் அமீன்
அப்தாப் அமீன்

மும்பையில் திருமணம் செய்ய வற்புறுத்திய தனது லீவ்ங் டூ கெதர் காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, ஒவ்வொரு நாளாக துண்டுகளை வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறி நாட்டையே உலுக்கியிருக்கிறது. மும்பையை சேர்ந்த இளம் பெண் 26 வயதான ஷரதா. இவர், அப்பகுதியில் உள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, ஷரதாவிற்கும் பிரபல உணவகத்தில் பணியாற்றி வந்த சமையல் கலைஞரான அப்தாப் அமீனுக்கும் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நட்பு, ஒரு கட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம், பெண் வீட்டிற்கு தெரியவந்ததை தொடர்ந்து அவர்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருக்கின்றனர். இதனால், குடும்பத்தினருடன் கோபித்து கொண்டு தனது காதலனுடன் ஒரே வீட்டில் தங்கியுள்ளார் ஷரதா .

 ஷரதா - அப்தாப் அமீன்
ஷரதா - அப்தாப் அமீன்

இதனை தொடர்ந்து, தம்மை திருமணம் செய்துக் கொள்ளுமாறு காதலனிடம் அவர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. காதலியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கோப மடைந்த அப்தாப் தனது காதலியின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்து இருக்கிறார். இதனை தொடர்ந்து, அவரின் உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி தனது வீட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளார். அந்த வகையில், கடந்த 18 நாட்களாக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் ஒவ்வொரு உறுப்பாக எடுத்து சென்று மெக்ரூலி காட்டில் வீசி வந்துள்ளான்.

கடந்த சில நாட்களாக தனது மகளை தொடர்பு கொள்ள முடியாமல் பெற்றோர் தவித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பெண்கள் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நாட்டில் பெருகிவருவது கவலைத் தருகிறது.இச்சம்பவம் சமூக ஆர்வலர்களிடையேயும், பொதுமக்களிடமும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com