9 வயதிலேயே துறவியான வைர வியாபாரியின் மகள்!

9 வயதிலேயே துறவியான வைர வியாபாரியின் மகள்!

கோடிக்கணக்கான சொத்துக்களையும், சொகுசான வாழ்க்கையையும் ஒதுக்கி விட்டு துறவியாகி உள்ளார் 9 வயது சிறுமி தேவான்ஷி. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இவரது தந்தை வைர வியாபாரி. சிறு வயது முதலே ஆன்மிகம் மற்றும் எளிய வாழ்க்கையில் இவருக்கு ஈடுபாடு இருந்து வந்துள்ளது. தினமும் மூன்று முறை பிரார்த்தனை செய்வது, துறவிகளை பின்பற்றுவது, துறவறம் பூணும் நிகழ்ச்சியை பார்ப்பது... இறுதியில் ஜைன மதத் துறவியிடம் சென்று துறவி ஆக வேண்டும் என்ற தன் விருப்பத்தை தெரிவித்து துறவியாகி உள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் நகரில் வசிக்கும் வைர வியாபாரி தனேஷ் சங்வி. இவரது மனைவி அமி சங்வி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் தேவான்ஷி (9). இரண்டாவது மகள் காவ்யா(5).

மூத்த மகள் தேவான்ஷி தனது 9 ஆவது வயதிலேயே துறவியாகியுள்ளார்.

பலரும் சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ்வதற்காக பல வழிகளிலும் அரும்பாடுபட்டு பணம் சேர்க்கும் இந்தக் காலத்தில், ஒரு சிறுமி தனது கோடிக்கணக்கான சொத்துக்களை எல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு துறவறம் பூண்டுள்ளார்.

தனேஷின் குடும்பம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வைர வியாபாரம் செய்து வருகின்றது. இவரது சங்வி& சன்ஸ் நிறுவனம் வைரத்தை பட்டை தீட்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இவரது நிறுவனம் ஆண்டுக்கு ரூ.100 கோடி மதிப்பில் வியாபாரம் செய்து வரும் நிலையில், மூத்த மகள் தேவான்ஷிக்கு பணம் சொத்து ஆகியவற்றில் ஆரம்பம் முதலே நாட்டம் ஏதும் இல்லை.

9 வயது தேவான்ஷிக்கு ஆன்மீகம் மற்றும் எளிய வாழ்க்கையில்தான் ஈடுபாடு இருந்துள்ளது. குழந்தை பிராயத்தில் இருந்து மூன்று முறை பிரார்த்தனை செய்வது, துறவிகளை பின்பற்றுவது போன்றவற்றில் ஈடுபட்ட வந்தார். மேலும், இந்த சிறுமி டிவி, சினிமா ஆகியவற்றை பார்க்கமாட்டார் எனவும், ஒரு முறைக்கூட ஆசையாக ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டதில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும், 367 முறை துறவறம் பூணும் நிகழ்ச்சியை பார்த்துள்ள தேவான்ஷி தானும் துறவியாக முடிவெடுத்தார். எனவே, ஜைன மதத் துறவியிடம் சென்று தனது விருப்பத்தை கூறியுள்ளார் தேவான்ஷி. துறவுக்கான கடினமான வாழ்க்கை வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பதற்காக துறவிகளுடம் 600 கிமீ நடைப்பயணம் மேற்கொண்டு எளிமையான வாழ்க்கைக்கு பழகியுள்ளார்.

இதைத் தொடர்ந்து 9 வயது தேவான்ஷிக்கு தீட்சை தர ஜைன துறவி ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து தேவான்ஷியின் பெற்றோரின் சம்மதத்துடன், நேற்று துறவுக்கான தீட்சையை பெற்றுள்ளார்.

9 வயது தேவான்ஷிக்கு 5 மொழிகள் தெரியும். இவருக்கு 5 வயதில் காவ்யா என்ற தங்கை உள்ளார்.

குஜராத்தில் நேற்று நடைபெற்ற விழாவிற்கு யானை, குதிரை, ஒட்டகம், கார் ஆகியவற்றின் பிரம்மாண்ட ஊர்வலத்துடன் தனது தாய் தந்தையுடன் வந்த தேவான்ஷி துறவியாக தீட்சை பெற்றார்.

பல கோடி சொத்துக்களுக்கு சொந்தமானவரின் மகள் மிக இளம் வயதிலேயே துறவு பூண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com