பிறந்த குழந்தை
பிறந்த குழந்தை

பிரசவத்துக்கு மறுத்த மருத்துவமனை! சாலையிலேயே பிறந்த குழந்தை!

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள மருத்துவமனை அருகே சாலையில் பெண் ஒருவர் குழந்தையை பிரசவிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கர்ப்பிணிப் பெண்ணை மறைப்பதற்கு சில பெண்கள் பெட்ஷீட்டை வைத்திருப்பதைக் காணொளி காட்டுகிறது. அந்த பெண் வலியால் அலறி துடித்துள்ளார்.

100 படுக்கைகள் கொண்ட திருப்பதி மகப்பேறு மருத்துவமனை ஊழியர்கள் அப்பெண்ணை அனுமதிக்க மறுத்ததால், அந்தப் பெண் குழந்தையை நடுரோட்டில் பெற்றெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவருடன் யாரும் வராததால் அவரை அனுமதிக்க முடியாது என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாக சொல்லப் படுகிறது.

 அனுமதி மறுக்கப்பட்டு மருத்துவ மனையில் இருந்து வெளியே வந்த அந்தப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படத் தொடங்கியதை அடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முன் வந்தனர். ரோட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. குழந்தையைப் பெற்றெடுக்க உதவியவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிபவர் என்று கூறப்படுகிறது.

குழந்தை
குழந்தை

பின்னர் பிறந்த குழந்தையையும், அந்தப் பெண்ணையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிதுள்ளனர் மருத்துவமனை ஊழியர்கள்.

 திருப்பதி மாவட்ட சுகாதாரப் பொறுப்பாளர் ஸ்ரீஹரி இச்சம்பவம் பற்றி கூறுகையில், இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இனி எந்த கர்ப்பிணிப் பெண்ணும், உதவியாளர் இல்லாமல் மருத்துவமனைக்கு வந்தாலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் திருப்பதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com