வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம்!
18 முதல் 25 வரையிலான இளைஞர்கள் வேலைக்குச் செல்வது கடந்து ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை 2018 வரை 50 சதவீதமாக மட்டுமே இருந்திருக்கிறது. தற்போது 56 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் புதிதாக பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. மாதம் சம்பளம் தரும்போதுதான் நிறுவனங்கள் பி.எப் பிடித்தம் செய்கின்றன. ஆகவே, மாத சம்பளம் பெறும் இளைய தலைமுறையினர் அதிகரித்திருக்கிறார்கள் என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
தேசிய புள்ளியியல் அமைப்பு தரும் தரவுகளின் அடிப்படையில் பணியில்ர உள்ள ஊழியர்களின் ஊதியத்தை முன்வைத்து ஆய்வு செய்தததில் இன்னும் சில முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் பி.எப் பிடித்தம் செய்வது 3 சதவீதம் குறைந்திருக்கிறது. அதாவது 35 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் வேலையிழப்பிற்கு ஆளாகிறார்கள் அல்லத மாத சம்பளம் பெறுவதை விரும்பாமல் சொந்தமாக தொழில் தொடங்கும் முயற்சிகளில் இறங்குகிறார்கள்.
இளைய தலைமுறையினர் தொடர்நது பணிக்கு செல்ல விரும்புவது குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பின்னர் அதிகரித்திருக்கிறது. இது 2018 முதல் 2021 வரை சீராகவே உயர்ந்திருக்கிறது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 3 சதவீத இளைஞர்கள் புதிதாக வேலைக்கு வருவது தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்ல இளம்பெண்கள் வேலைக்கு செல்வதும் அதிகரித்திருக்கிறது. இதுவும் ஆண்டுதோறும் 2 சதவீதம் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது.
2021 ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்தாண்டில் 13.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதாவது புதிதாக பணிக்கு சேர்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டில் 13 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அனைத்து மாற்றங்களுக்கும் கொரோனா தொற்றுதான் காரணமாக இருந்திருக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் வேலைக்கு செல்லாமல் இருப்பது அல்லது சுய தொழில் தொடங்குவதும் குறைந்திருக்கிறது.
ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து ஊதியம் பெறுவது என்கிற எண்ணம் இளைஞர்களின் மத்தியில் தொடர்ந்து அதிகரித்தபடி வருகிறது. இன்றைய நிலையில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 7 கோடியாக இருந்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன்னர் இதுவே 6 கோடியாக இருந்தது. ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் கூட அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு இனி 40 வருஷம் காத்திருக்க வேண்டும்.