வீடு வாடகைக்கு தர 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்ட உரிமையாளர்!

வீடு வாடகைக்கு தர 12 ஆம் வகுப்பு மதிப்பெண் கேட்ட உரிமையாளர்!

பெங்களூர் மென்பொருள் தொழில் நகரமாகவும் வர்த்தக கேந்திரமாகவும் உருவாகி வருவதால் அங்கு வேலைநிமித்தமாக பணியில் சேர்ந்து வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், தகவல் தொழில்நுடப்பத்துறையில் பணி செய்யும் என்ஜினீயர்களுக்கு வீடு கிடைப்பதே பெரும் பிரச்னையாக உள்ளது. அப்படியே வீடு வாடகைக்கு கிடைத்தாலும் உரிமையாளர்கள் அதிக வாடகை கேட்பதுடன், டெபாசிட்டும் அதிகம் கேட்கிறார்கள்.

உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு அதிக வாடகை கேட்பதுடன் நில்லாமல், வாடகைக்கு வருபவர்களிடம் தேவையில்லாத பல கேள்விகளையும் கேட்டு நிர்பந்திக்கிறார்கள்.

வீடு வாடகைக்கு கேட்டு வரும் நபர்களிடம் நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள், உங்கள் நண்பர்கள் யார் என்று கேட்பதுடன் நில்லாமல் அவர்களைப் பற்றிய மேலும் சில தகவல்களையும் கேட்கிறார்கள், அதாவது ஒவ்வொருவரும் தங்கள் சுயசரிதையையே சொல்ல வேண்டியுள்ளது.

இப்படி வீட்டின் உரிமையாளர்கள் என்னவெல்லாம் கேள்வி கேட்கிறார்கள் என்பதை பெங்களூரில் வாடகைக்கு குடியிருப்பவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் வீடு வாடகைக்கு கேட்டுவந்த ஒருவர் சந்தித்த பிரச்னையை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். சுப் என்பவர் அந்த விடியோவை பகிர்ந்துள்ளார். 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக வாங்கியிருந்ததால் தனது உறவினர் ஒருவருக்கு வீட்டை வாடகைக்கு தர வீட்டின் உரிமையாளர் மறுத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனது உறவினருக்கு குடியிருக்க வீட்டை வாடகைக்கு தர வீட்டின் உரிமையாளர் மறுத்துள்ளார். ஏனெனில் அவர் 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைவாக வாங்கியிருந்தாராம். எனது உறவினர் ஒன்றும் குறைவாக மதிப்பெண் பெறவில்லை. அவர் 12 ஆம் வகுப்பில் 75 சதவீத மார்க் வாங்கியுள்ளார். ஆனால், வீட்டின் உரிமையாளர் 12 ஆம் வகுப்பில் நீங்கள் 90 சதவீத மதிப்பெண்கள் வாங்கியிருப்பீர்கள் என எதிர்பார்த்தேன். நீங்கள் குறைவாகவே வாங்கியுள்ளீர்கள். எனவே உங்களுக்கு வீட்டை வாடகைக்கு தரமுடியாது” என்று கூறிவிட்டாரம்.

வாடகைக்கு வீடு கேட்க வருபவர்களிடம் இப்படி தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு வீடு தர மறுக்கின்றராம் வீட்டின் உரிமையாளர்கள். மேலும் மும்பைக்கு நிகராக வீட்டு வாடகையை உயர்த்தி கேட்கின்றராம். இதனால் பெங்களூரில் வீடு தேடும் நபர்கள் மிகவும் நொந்துபோயுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில் மட்டும் அமேஸான், கோல்டுமான், ஆல்ப்பெட், அசென்சூர் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் சுமார் 15 லட்சம் பேர் பணி செய்து வருகின்றனர். கரோனா தொற்றுக்காலத்தில் இங்குள்ள பணியார்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வீட்டிலிருந்தபடியே இரண்டு ஆண்டுகள் வேலை செய்ததால் நகரில் வீட்டு வாடகை வெகுவாக குறைந்திருந்தது. சில இடங்களில் வீடுகள் காலியாக இருந்தன. இப்போது மீண்டும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பெங்களூருக்கு வந்து பணி செய்யத் தொடங்கியுள்ளதால் வீட்டின் உரிமையாளர்கள் வட்டியும் முதலுமாக சேர்த்து வாங்கும் நோக்கில் அதிக வாடகையும், டெபாசிட் தொகையும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com