ஆசிரியரை தீவிரவாதி என மிரட்டிய போலீஸ்!
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள ஜமுய் காவல் நிலைத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டுவருகிறது.
அந்த குறிப்பிட்ட வீடியோ கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த வீடியோவில் பாட்னாவில் உள்ள ஐமுய் காவல் நிலையத்தில், குடும்பத்தினருடன் வந்திருந்த ஆசிரியர் ஒருவரை பார்த்து பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சரண் என பெயரிடப்பட்ட போலீஸ், "நான் நினைத்தால் பொதுமக்களில் யாரைவேண்டுமானாலும் தீவிரவாதி என முத்திரை குத்த முடியும், இந்த நொடிபொழுதில் உன்னை தீவிரவாதி என முத்திரை குத்தவா" என இருக்கையில் இருந்து எழுந்து ஆவேசமாக அங்கிருந்த ஆசிரியரை நோக்கி கேள்வி எழுப்புவதை பார்க்கமுடிகிறது.
முன்னதாக இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர், தனது குடும்ப உறுப்பினர்களுடன், தலைநகர் பாட்னாவில் இருந்து 165 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜமுய் காவல் நிலையத்திற்கு ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதற்காகச் சென்றிருக்கிறார். ஆனால், அவர் போலீசார் குறிப்பிட்ட நாளில் காவல் நிலையத்திற்கு வராமல், மூன்று கழித்து தாமதமாக வந்துள்ளார். இதனால், கோபமடைந்த போலீசார், அவரிடன் இவ்வாறு ஆக்ரோஷமாக நடந்துக்கொண்டுள்ளார் என தெரிகிறது. ஆசிரியர் ஒருவரை தீவிரவாதி என மிரட்டும் காவலர் ராஜேஷ் சரணின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.