சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை கொலை செய்த கேரள இளைஞரின் வெறிச் செயல்!

சிகிச்சை அளித்த பெண் மருத்துவரை கொலை செய்த கேரள இளைஞரின் வெறிச் செயல்!

கேரள மாநிலம், பூயப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப். ஆசிரியராக இருக்கும் இவர் மது போதைக்கு அடிமையானதால் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில் சந்தீப் தனது குடும்பத்தினருடன் சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்ததோடு, மருத்துவப் பரிசோதனைக்காக கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் வந்தனா தாஸை, சந்தீப் அங்கிருந்த கத்தரிக்கோலால் மார்பு, கழுத்து போன்ற பகுதிகளில் பலம் கொண்டு குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொலை வெறித் தாக்குதலில் நிலைகுலைந்து போன மருத்துவர் வந்தனா தாஸ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலைத் தடுக்க சென்ற போலீசார் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இந்தக் கொடூரக் கொலை வெறித் தாக்குதல் சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து சந்தீப் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் நிலையில், ஏழு நாட்களுக்குள் கொல்லம் மாவட்ட எஸ்பி அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வெறித் தாக்குதல் தொடர்பாக மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com