இந்தியாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படாது: நிதி ஆயோக் முன்னாள் துணைத்தலைவர்!

இந்தியா பொருளாதாரம்
இந்தியா பொருளாதாரம்

உலகின் பல நாடுகளும் பொருளாதார மந்தநிலையை நோக்கி நகர்ந்து வரும் சூழ்நிலையில், இந்தியா அடுத்த நிதியாண்டில் 6-7 சதவீத பொருளாதார வளர்ச்சியை தக்க வைக்கும் என நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது.

 இந்தியாவில் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. சர்வதேச நிலவரங்களால் நமது நாட்டுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. இன்னும் சொல்லப் போனால், அடுத்த நிதியாண்டில் நமது பொருளாதாரம் 6% முதல் 7% வரையிலான வளர்ச்சியை தக்க வைக்கும்.

அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் பின்னடைவு காணப்படுகிறது. இது அடுத்து வரும் சில மாதங்களில் உலக பொருளாதாரத்தை மந்தநிலைக்கு இட்டுச் செல்லும்.

பணவீக்கத்தைப் பொறுத்த வரை உச்சகட்டத்தை அடைந்து படிப்படியாக குறையும் என்பதே எனது கணிப்பு. சில்லறைப் பண வீக்கத்தைப் பொறுத்த வரையில் அது 6-7% அளவிலேயே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 உலக வங்கி கடந்த அக்டோபர் 6-ல் வெளியிட்ட மதிப்பீட்டில் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருக்கும் என தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com