இந்த புத்தகம் தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் உதவும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

இந்த புத்தகம் தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் உதவும் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி எழுதிய “Exam Warriors” என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை சென்னை ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, நிகழ்ச்சிக்கு வந்த பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் தமிழாக்கத்தை வழங்கினார்.

முன்னதாக, இந்தியில் பள்ளி குழந்தைகள் தேர்வுக்கு எப்படி பயமின்றி தயார் ஆகலாம் என்பது குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து பேசிய ஆளுநர், “இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இந்த புத்தகம் வழங்கப்படும் என்றார். இந்த புத்தகம் தேர்வு எழுத மட்டுமில்லாமல் உங்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் உதவும். நம் பிரதமர் வித்தியாசமான மனிதர். கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளார். .

நம் பாரத நாடு  பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா எப்படி யாரால் ஆளப்படுகிறது, என்னாலோ என்னை போல் பதவியில் இருப்பவர்களாலோ இல்லை. உங்களை போன்ற மாணவர்கள், இளைஞர்களால்தான். நீங்கள் பாறை போன்றவர்கள். உங்களுக்குள் அழகான வைரம் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் கரடுமுரடாகதான் இருக்கும். ஒருமுறை அது வெளிப்பட்டால் அதன் மதிப்பு தெரியும். நீங்கள் சிறந்த மருத்துவர், ஆராய்ச்சியாளர் என வரப்போகிறவர்கள். 

தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயல்கிறார்கள். தேர்வை மட்டுமல்ல வாழ்க்கையையும்  எப்படி எதிர்கொள்வது என்பதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு எளிய டிப்ஸ் கொடுக்கிறது. சிலர் இதில் சிலவற்றை பின்பற்றி கூட இருக்கலாம். என் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது நீங்கள் தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள் , அது கடினமாக இருந்தால் அதிகம் புன்னகை செய்யுங்கள். இது என் யு.பி.எஸ்.சி.(UPSC) தேர்வில் எனக்கு உதவியது.

என் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தேர்வு தாளை பார்த்ததும் புன்னகை செய்யுங்கள். அது கடினமாக இருந்தால், அதிகம் புன்னகை செய்யுங்கள். இது என்னுடைய யுபிஎஸ்சி(UPSC) தேர்வில் எனக்கு உதவியது. உங்களை நீங்கள் நம்புங்கள். பெற்றோர்கள் மாணவர்கள் படிப்பில் முக்கிய பங்காற்றுகின்றனர். இன்னொரு குழந்தை 99% எடுத்துள்ளது. நம் குழந்தை 97% எடுத்துள்ளார்கள் என வருத்தப்படுகிறார்கள்.

ஒரு இளம் ஆண் அல்லது பெண், வாழ்வில் முன்னேறாமல் இருப்பது, அவர்களின் இழப்பு மட்டுமல்ல நாட்டின் இழப்பு. நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ந்து வரவில்லை என்றால் அது உங்களுக்கும் இழப்பு. உங்கள் பெற்றோருக்கும் இழப்பு. இந்த நாட்டுக்கும் இழப்பு. தேர்வு மட்டும் இறுதி இல்லை. தேர்வு பயத்தில் பதற்றம், மன அழுத்தம் காரணமாக உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு, தற்கொலைக்கு முயல்கிறார்கள். அது மிகவும் கொடுமையானது.

ஆலமரம் விதை  கடுகு போல சிறியதாக இருக்கும். நீங்கள் அந்த விதை போல சிறியதாக இருந்தாலும் ஆலமரம் போல வளர வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு உதவும். நீங்கள் உங்களின் தகுதியை உணர்ந்து வளர்ந்து வரவில்லை என்றால் அது உங்களுக்கும் இழப்பு, உங்கள் பெற்றோருக்கும் இழப்பு, இந்த நாட்டுக்கும் இழப்பு என்று மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com